மக்களிடையே... மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள கோயில், பூசை, யாகம் மற்றும் பழக்கவழக்கமான சடங்குகளே காரணமாய் இருப்பதால், இவைகள் ஒழிக்கப்படும்வரை மக்களிடையே சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை வளராது. (விடுதலை, 9.8.1965) இலக்கியமும்- பெரியாரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பில் நேற்று (21.9.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியாரின் இலக்கியப் பார்வை - புதுவெள்ளம் - புதுநோக்கு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை மய்யப்படுத்தி, அதன் சாராம்சத்தை எடுத்துக்காட்டிய விளக்கவுரையாக அது அமைந்திருந்தது. பொதுவாக தந்தை பெரியார்பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின்மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டதுபோலவும், கருத்துகளைச் சொன்னதுபோலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது. தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப்பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார். இதன் பொருள் ஆங்கிலத்திற்கு நிகராக தமிழும், விஞ்ஞான மொழியாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதானே தவிர, தமிழை அவமானப்படுத்தியதாகவோ, தரம் தாழ்த்தி சொன்னதாகவோ பொருளாகாது. தமிழையும், மதத்தையும் தனியே பிரித்துவிடவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதையும், மதச் சார்பற்றவர் களுக்குத் தமிழில் இருப்பது எது என்று தந்தை பெரியார் வினா எழுப்பியதையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார். தமிழ் மொழியிலிருந்து புராணங்களையும், இதிகாசங் களையும் கழித்துவிட்டால், எஞ்சி நிற்பது எதுவாக இருக்கும் என்பது அர்த்த வளமிக்க வினாவாகும். மதம் என்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்று புரட்சிக்கவிஞர் பாடியதும் இந்த அடிப்படையில்தான். நமது தமிழ்ப் புலவர்களுக்குப் புராண ஞானம் இருக்கும் அளவுக்கு பொது ஞானமோ, அறிவியல் ஞானமோ இருப்பதில்லையே என்று தந்தை பெரியார் கூறியதும், நமது புலவர்களின் அறிவு காலத்துக்கேற்ற அளவு மேம்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான். தமிழிலேயே வருணம் புகுத்தப்பட்டு இருப்பதுபற்றி தந்தை பெரியார் கேட்கிறார். மக்கள், தேவர், நாகர் உயர்திணை என்று தமிழ் இலக்கணத்திலேயே கூறப் பட்டுள்ளதே என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு அன்றைக்கு அய்யாவோடு இருந்த திரு.வி.க., நமசிவா யனார், கந்தையா போன்ற புலவர்கள்முதல் இன்றுவரை உள்ள புலவர்களும் விடையிறுத்ததில்லையே! இந்த இடத்தில் இன்னொன்றும் முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்கது ஒன்றுண்டு. பாக்களில் சிறந்ததான வெண்பாவால் பார்ப்பனர்களை மட்டும் பாடவேண்டும்; அரசனுக்கு ஆசிரியப்பா, வைசியருக்கு கலிப்பா, சூத்தி ரருக்கு வஞ்சிப்பா என்று வருணப் பிரிவை இலக்கணத்தில் (வச்சணந்தி மாலை) திணிக்கப்பட்டுள்ளதே! பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் (சத்திரியர்) என்றும், அடுத்த நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் இலக்கணம் கூறப்பட்டதற்கு என்ன சமாதானம்? தந்தை பெரியார் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்; ஒன்றின் மீது வினாவை எழுப்புகிறார் என்றால், அது நோய்நாடி, அதன் முதல் நாடுவதாகத்தான் இருக்கும். லென்ஸ் வைத்து தந்தை பெரியார் படித்ததுபற்றி கூறிய விடுதலை ஆசிரியர் அவர்கள், நமது இலக்கியங்களில், புராணங்களில் நெளியும் கிருமிகளைக் கண்டுபிடிக்கத் தான் என்று நயத்தோடும், அதேநேரத்தில் ஆழ்ந்த பொருளோடும் கூறினார். ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து உனக்கு இங்கிலாந்து வேண்டுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? என்று கேட்டால், எனக்கு இங்கிலாந்து வேண்டாம்; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று கூறுவான் என்று தந்தை பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் கூறியதை எடுத்துக்காட்டி, அடுத்து அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சொன்ன கருத்து அவையில் வெடிச்சிரிப்பையும், அத்தோடு விவேக அலையையும் எழுப்பியது. உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால், இந்த இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு ஆமாம் போடுவதைத் தவிர வேறு வழி என்ன? இலக்கியம் முதல் இனக் கோட்பாடுவரை எதைத் தொட்டாலும் தந்தை பெரியார் தன்னிகரற்ற சூரியனாகவே தகிக்கிறார் என்பதுதான் உண்மை! உண்மையிலும் பேருண்மை!! |
புதன், 22 செப்டம்பர், 2010
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
பெரியாரின் சமூகநீதிக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம்
பெரியாரின் சமூகநீதிக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம் - கி. வீரமணி சென்னை பெரியார் திடலில் 17.9.2010 அன்று மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பாராட்டு விழா மற்றும் பெரியார் தெலுங்கு திரைப்பட திரையிடல் வெளியீட்டில் பங்கேற்றோர்: மேடையில் இடம் இருந்து வலம் ஞான. ராஜசேகரன் அய்.ஏ.எஸ்., ரவிவர்மகுமார், நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், நீதிபதி ஏ.கே. ராஜன், நீதிபதி எம்.என். ராவ், வீ. அனுமந்தராவ், ரவிமல்லு, கட்டி பத்மராவ், பி. சுனில், கலி. பூங்குன்றன். உரையாற்றுகிறார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். சென்னை, நவ.19- தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2010 அன்று மாலை நடை பெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரை யில், பெரியாரின் சமூகநீதியைக் கொடியை நாடெங்கும் எடுத்துச் செல்வோம் என்றார். தமிழர் தலைவர் உரை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் தலைமையுரையாற்றினார். தமது உரையில் குறிப்பிட்டதாவது: சமூகநீதியைப் பாதுகாக்கின்ற பட்டாளம் தந்தை பெரியார் அவர்களு டைய 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை உலகின் பல்வேறு பகுதி களில் இன்று உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின் றார்கள். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதே சமூகநீதிக்காகத் தான் என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சமூகநீதியைப் பாதுகாக் கின்ற பட்டாளம்தான் இங்கே இந்த மேடையிலே இருக்கின்ற வர்கள் - இங்கே வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினரான, பாராட் டப்படக் கூடிய தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தலைவர் நீதியரசர் எம்.என்.ராவ் அவர்கள் வந்திருக்கின்றார். அவர் இமாச் சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாகப் பணிபுரிந்த திறமை மிக்கவர். அவர் மிகச் சிறந்த அளவுக்கு வருமானம் உள்ள நிலைகளை எல்லாம் துறந்து, சமூகநீதிக்காகப் பாடுபட வேண்டும் என்று வந்தி ருக்கின்றார். மத்திய அரசும் சரி யான நேரத்தில் அவருக்கு இந்தப் பதவியை வழங்கியிருக்கிறது. மத்திய அரசுக்கும் நமது பாராட்டு தல்கள். அவரும் இந்தப் பதவியை மனமுவந்து ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் களை எல்லாம் சமூகநீதியை நிலைநாட்ட அவர்களை எல்லாம் ஒருங்கிணைக் கக் கூடிய நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் கன்வீனர் வீ. அனுமந்த் ராவ்காரு எம்பி. அவர்கள் இங்கே வந்திருக்கின்றார். பெரியார் படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடுகிறது தந்தை பெரியார் திரைப்படம் தெலுங்கு மொழியில் சிறப்பாக வெளியிட பாடுபட்ட பி. சுனில் அவர்கள் வந்திருக் கின்றார். நல்ல துடிப்பு மிகுந்த ஆற்றலாளர் அவர். இன்றைக்கு தந்தை பெரியார் திரைப்படம் ஆந்திராவில் தெலுங்கு மொழியில் வெற்றிகர மாக ஓடிக் கொண்டிருக் கின்ற செய்தியைக் கேட்டு, நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். பெரி யார் படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருக் கின்றது என்ற செய்திகள் நமக்குக் கிடைத்திருக் கிறது. ஸ்டாலின் கலந்துகொண்டார் பெரியார் திரைப் படம் தெலுங்கு மொழி யிலே வெளியிட அய்த ராபாத்தில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சி யில் நம்முடைய துணை முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அதேபோல பெரி யார் திரைப்படத்திற்கு தெலுங்கு மொழியில் உரையாடல் எழுதிய கட்டி பத்மராவ் அவர் கள் வந்திருக்கின்றார். அவர் எவ்வளவு பெரிய ஆற்றலாளர் என் பதை அவருடைய பேச்சைக் கேட்ட உங்க ளுக்கெல்லாம் தெரியும். அதே போல டாக்டர் ரவி மல்லு அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரியாக இருக்கின்றவர். அவரு டைய முயற்சியால்தான் பெரியார் படம் தெலுங்கு மொழியில் இந்த அள வுக்குச் சிறப்பாக வந்திருக்கிறது. ஆந்திர மக்களிடையே இந்தப் படம் செல்வதற்கு மூலகர்த்தாவாக இருந்து செயல்பட்டவர். அதேபோல நம்மு டைய ஜஸ்டிஸ் ஜனார்த் தனம், ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் ஆகியோரும் மற்றும் ஆந்திர நாத்திக சமாஜ்ஜியத்தை சேர்ந்தவர்கள். அதே போல கர்நாடக மாநி லத்தில் பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த வரும், உச்சநீதிமன்றத்தில் மிகச் சிறப்பாக வாதாடக் கூடியவருமான வழக் கறிஞர் ரவிவர்மகுமார் வந்திருக்கிறார். அதே போல பெரியார் படத்தை எடுத்த இயக் குநர் ஞானராஜசேகரன் அய்.ஏ.எஸ். போன்ற வர்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள். அனைவரை யும் இந்த நேரத்தில் மன மகிழ்ச்சியோடு வரவேற் கின்றோம். அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் நல ஊழியர்கள் சங்க கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் கோ. கருணாநிதி அவர்கள் சிறந்த செயல் திறன் மிக்கவர். சமீபத்தில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மிகச் சிறப்பான பாராட்டு விழாவை நடத்தினார். அனைவரும் பாராட்டத் தக்க அளவிலே அவர் ஒரு நல்ல குழு அமைப்போடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அகில இந் திய அளவிலே பணியாற் றிக் கொண்டிருக்கின் றார். அருமையான செயல் வீரர். கருணாநிதி என்றால் சமூகநீதி கருணாநிதி என்றாலே அது சமூகநீதியின் மறு பெயர்தானே. நான் ஒரு நீண்ட உரை ஆற்றப் போவதில்லை. நாமெல் லாம் உள்ளபடியே மன நிறைவோடு மகிழ்ச்சி யோடு இருக்கின்றோம். பெரியார் அப்பொழுதே சொன்னார் தந்தை பெரியார் அவர்கள், தனியாக நாங் கள் அவரிடம் உரை யாடிக் கொண்டிருக் கின்ற பொழுது சொன்னார்.: இடஒதுக்கீட்டைப் பொறுத்த வரையிலே மத்திய அரசு ஒரு வேளை வழங்க முன்வந்தாலும், மத்திய அரசை நடத்தி வருகின்ற நிருவாகத் தினரான உயர்ஜாதிக் காரர்கள் விட மாட்டார் கள் என்று சொன்னார். அது இன்றைக்கும் எவ் வளவு பெரிய உண்மை என்பதைப் பார்க்கி றோம். தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவர் அவர்களே! வீ. அனுமந்தராவ் அவர் களே! ரவிமல்லு அவர் களே! தந்தை பெரியாரின் சமூகநீதிச் சுடரை ஏந்திச் செல்லுங்கள். சமூக நீதியை நிலை நாட்டி சமூகநீதிக் கொடி பட் டொளி வீசிப் பறக்கச் செய்ய முயற்சி எடுங்கள். உங்கள் முயற்சிக்கு என் றென்றைக்கும் நாங்கள் துணை நிற்போம். இவ் வாறு பேசினார். நிகழ்ச்சிகள் தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.9.2010 அன்று காலை மாபெரும் கருத்தரங்கம் நடை பெற்றது. அடுத்து மாலை பாராட்டு விழா, பெரி யார் தெலுங்கு திரைப் படம் திரையிடல் விழா மிகச் சிறப்பாக தொடங் கியது. வீ. அன்புராஜ் திராவிடர் கழக தலைமை நிலையச் செய லாளர் வீ. அன்புராஜ் வரவேற்று உரையாற்றி னார். வந்திருந்த அனை வரையும் வரவேற்ற அவர், தந்தை பெரியார் கொள்கை இன்று தமிழர் தலைவரின் அரிய உழைப்பினால் பரவி வருவதை எடுத்துக்காட் டினார். சமுக நீதிக்காக பொது நலனுக்காகப் பாடுபடுகிறவர்களை பாராட்டுவதுதான் பெரி யார் இயக்கத்தின் வழமை; அந்த வகையிலே இன் றைக்கு வந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களுக் குப் பாராட்டு விழா நடைபெறுகின்றது என்று கூறினார். பெரி யார் படம் தெலுங்கு மொழியில் வெற்றி நடை போடுவதை விளக்கினார். கோ. கருணாநிதி அகில இந்திய பிற் படுத்தப்பட்ட பணியா ளர் நலச் சங்கக் கூட்ட மைப்பின் பொதுச் செய லாளர் கோ. கருணாநிதி அறிமுகவுரையாற்றினார். அவர் தனது உரையில் தந்தை பெரியார் 132ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (செப்.17) நாடெங்கும் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றோம். பிகார் மாநிலத்தில் தேர்தல். அவரவர்கள் அங்கு முனைப்போடு தேர்தல் பணியாற்றிக் கொண்டி ருக்கின்ற பொழுது பீகார் பாட்னாவில் திரி வேணி சங்கமம் என் னும் அமைப்பினர் இந்த நேரத்தில் அங்கு பெரி யார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடிக் கொண்டி ருக்கின்றார்கள் என்ற செய்தி நமக்கு வந்திருக் கிறது. இன்றைக்கு தமிழ கத்தைத் தாண்டி சமூக நீதி இந்தியா முழுவதும் நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுடைய முயற்சியால் பரவி வரு கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை, அவர்களு டைய தியாகம் ஆகிய வற்றை எல்லாம் உற்சாக மாகப் பரப்பி வருகிறார் நம்முடைய தமிழர் தலைவர். தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய தலைவர் எம்.என். ராவ் அவர்களைப் போன்ற தொரு சமூகநீதிப் போரா ளியைப் பார்க்க முடி யாது. பெரியார் படம் இந்தியில், ஃபிரெஞ்சில் அந்த அளவுக்கு சமூகநீதியில் அக்கறை கொண்டவர். அவர் அதே போல அனுமந்த ராவ் எம்.பி. அவர்களும் சமூகநீதிக்காகப் போராடிக் கொண்டிருப் பவர். பெரியார் படம் அடுத்து இந்தி மொழி யில் வர வேண்டும். ஃபிரெஞ்சு மொழியில் வர வேண்டும். உலகம் எல்லாம் ஆழமாகப் பெரியார் கொள்கை பரவ பல மொழிகளில் பெரியார் படம் வர வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். கட்டி பத்மராவ் தெலுங்கு பெரியார் திரைப்பட உரையாடல் ஆசிரியர் கட்டி பத்ம ராவ் தனது உரையில், தந்தை பெரியார் தமிழ கத்தில் மட்டுமல்ல வட புலத்திற்கும் மேலும் பரவச் செய்ய வேண்டும். ஆந்திராவில் பெரியார் படம் டிக்கெட் ரூ.300க்கு விற்பனையாகிறது என் றால் அதனுடைய வர வேற்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். தலைவர் வீரமணி அவர்களை அழைத்து ஆந்திர மாநி லத்தில் பெரியாரின் கொள்கை பரவ பெரும் பிரச்சாரத்தில் ஈடுபடு வோம் என்றார். வீ. அனுமந்தராவ் எம்.பி. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்களின் ஒருங் கிணைப்பாளர், அனுமந் தராவ் தனது உரையில், திராவிடர் கழகம் எனும் பெரியாரின் சீரிய இயக்கம் என்னைப் பாராட்டியமைக்கு மிக வும் மகிழ்கிறேன். அனை வருடைய சுயமரியாதைக் கும், வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்களின் சமூக நீதிக்கும் உழைத்துப் பெரும் தியாகங்கள் செய் தவர், பெரியார் என்றார். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு அறிஞர் அண்ணா, அவரைப் பற்றிக் குறிப் பிடும் பொழுது, நூற் றாண்டுகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங் களை சில பத்தாண்டு களில் சாதித்தவர் என்றார்; அது உண்மை. இந்தியா வின் சமூகநீதிப் போராட் டத்திற்குத் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இங்குதான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டப் பாதுகாப்புப் பெற்று நடப்பில் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் பிற்படுத்தப்பட்ட உறுப் பினர்களில் 140 பேரை ஒன்று சேர்த்து, சமூக நீதிக்குப் போராடி வருகி றோம். தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணையத் திற்குச் சட்ட முறையி லான ஏற்பு அளிக்க வேண்டுமென வலியு றுத்தி வருகிறோம். பிற் படுத்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை நடை முறைப்படுத்துவதற்கான ஏற்பாடு (மெகானிசம்) இல்லாமல் இருக்கிறது. சுயமரியாதையும் சமூக நீதியும் என்றும் நம்மை வழிநடத்திச் செல்ல வேண்டிய கொள்கைகள் என்ற வகையில் பாடு படும் திரு. வீரமணி அவர்களைப் பாராட்டு கிறேன். எம்.என். ராவ் தேசியப் பிற்படுத்தப் பட்டோர் ஆணையத் தின் தலைவர், எம்.என். ராவ் ஆற்றிய உரையின் கருத்து: தமிழ்நாட்டில் ஒரு ஞானியாக இருந்து, துறவியாய் வாழ்ந்தவர் பெரியார். இன்று அவ ருடைய செய்தி, கொள்கை, நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. சமுதாயத்தின் சில பகுதியினரை அடிமை களாக்கி வைத்திருந்தது ஜாதி முறை. அதை எதிர்த்துப் போராடி பெரியார் பல அவமா னங்களையும் எதிர்ப்பு களையும் எதிர்கொண்டு, துணிந்து பாடுபட்டார். சமுதாய அடிமைத் தளத்திற்கு அடிமை யாகிவிட்ட மக்கள் அதை எதிர்த்துப் போராடும் மன உறு தியை இழந்து இருந் தனர்; அவர்களுடைய மனம் கட்டுப்பட்டுக் கிடந்தது. கட்டுண்ட அடிமை மனங்களுக்கு விடுதலை தந்தவர், பெரி யார். ஜாதிதான் பிரிக்கிறது ஜாதியால் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள்; ஒதுக்கப்படுகிறார்கள். ஜாதியின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த அவலத்தை ஜாதி அடிப் படை ஒதுக்கீட்டின் மூலம்தான் போக்க முடியும். பொருளாதார அடிப்படையை மேற் கொண்டால், ஜாதி ஏற்றத் தாழ்வு நீடிக்கவே செய்யும், மறையாது. சமுதாய ஒதுக்கலை, சமூக நீதியின் மூலம்தான் போக்க முடியும்; அதற்கு ஜாதியை அளவுகோ லாகக் கொண்டு தீர்வு காண வேண்டும். சமுதாய மாற்றம் நிகழ்வதற்குச் சமூகநீதி தேவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண் டும்; தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவர் இடஒதுக் கீட்டின் பலனைப் பெற வேண்டும். இதை அடை வதற்கு உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும். 60 விழுக்காட்டிற்கு மேல் பிற்படுத்தப்பட்டோர் இந்தியாவில் குறைந் தது 60 விழுக்காடு மக் கள் பிற்படுத்தப்பட்ட வர்கள் என்பது மெய்ம் மையாகும். இன்றைக்குக்கூட, சதிஷ்கர், உத்தரகாண்ட், ஜார்கண்ட் ஆகிய மாநி லங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு மத்திய அரசு 27விழுக்காடு இடஒதுக் கீடு அளித்திருந்தாலும், சுமார் 7 விழுக்காடு இடங்களை மட்டுமே அவர்கள் பெற முடிந் திருக்கிறது. கிரீமிலேயர் கிரீமிலேயர் என்று சொல்லி, பிற்படுத்தப் பட்டவர்களில் முன்னே றியவர்கள் எனக் கூறி, ஒரு பகுதியினருக்கு இட ஒதுக்கீட்டின் நன் மையை மறுக்கும் ஏற் பாடு நீங்க வேண்டும். அப்பொழுதுதான் பிற் படுத்தப்பட்டவர்கள் தங்கள் ஒதுக்கீட்டை முழுமையாகப் பெற முடியும் இவ்வாறு அவர் பேசினார். சத்யராஜ் வாழ்த்து இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற இனமுரசு சத்யராஜ் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னதாக தலைமை உரையாற்றினார். கலி. பூங்குன்றன் மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் அர. இராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் முழுவதையும் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொகுத்து வழங்கினார். தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கூட்டத்தினர். (சென்னை பெரியார் திடலில் மாலை நிகழ்ச்சி 17.9.2010) |
-நன்றி "விடுதலை" 19-9-2010 |
செஞ்சியில் தந்தைபெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
செஞ்சி, செப்.19- செஞ்சியில் தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாளில் திராவிடர் கழக கொடியேற்றும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரி நடராசன், செஞ்சி நகரத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோபண்ணா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விவே கானந்தன், மாவட்ட அமைப்பாளர் துரை, செஞ்சி நகர துணை செயலாளர் இரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
அனந்தபுரத்தில் தந்தைபெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கழகக் கொடி ஏற்றி வைத்து அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்தரி நடராசன், புலவர் எத்திராசன், திமுக அனந்தபுரம் நகர செயலாளர் கல்யாண்குமார், காணை ஒன்றியத் தலைவர் நாராயணன், செஞ்சி நகரத் தலைவர் அண்ணாமலை, நல்லாப் பாளையம் கலையரசன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

